ஐ.பி.எல் : அதிரடியில் மிரட்டிய விராட் கோலி...பெங்களூரு அணி 182 ரன்கள் குவிப்பு

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார்

Update: 2024-03-29 15:37 GMT

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக விராட் கோலி , டு பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் 8 ரன்களுக்கு டு பிளசிஸ் ஆட்டமிழந்தார். பின்னர் கேமரூன் கிரீன் , விராட் கோலி இணைந்து சிறப்பாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 82 ரன்னாக இருந்த போது கிரீன் 33 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுபுறம் அதிரடியாக ஆடிய விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு  பெங்களூரு அணி  182ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 59பந்துகளில் 83ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா சார்பில் ஹர்ஷித் ராணா , ரசல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து ;ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்