ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20: அயர்லாந்து அபார வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து அபார வெற்றிபெற்றது.

Update: 2024-03-16 00:22 GMT

சார்ஜா,

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வெற்றிபெற்றது. ஒருநாள் போட்டியை 2-0 என்ற புள்ளி கணக்கில் ஆப்கானிஸ்தான் வென்றது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையே 3 டி20 ஆட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 ஆட்டம் சார்ஜாவில் நேற்று நடைபெற்றது.

இதில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹரி டெக்டர் அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றிபெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்