20 ஓவர் உலக கோப்பை: ஆஸ்திரேலிய வீரர் இங்லிஸ் காயத்தால் விலகல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் இங்லிஸ் காயத்தால் விலகி இருக்கிறார்.;
Image Courtesy: AFP
சிட்னி,
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று இருந்த மாற்று விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் கோல்ப் விளையாடிய போது ஸ்டிக்கின் கைப்பிடி பகுதி உடைந்து அவரது வலது கையில் குத்தியதில் காயம் அடைந்தார்.
இதனால் அவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக பேட்டிங் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளார்.