ஐ.பி.எல்.: இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ளும் ஐதராபாத்

ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் முன்னேறியுள்ளது.

Update: 2024-05-24 19:31 GMT

சென்னை,

நடப்பு ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகியவை தரவரிசை பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்தன.

இதையடுத்து, பட்டியலில் முதல் 2 இடங்களில் இருந்த கொல்கத்தா - ஐதராபாத் முதல் தகுதி சுற்று போட்டியில் களமிறங்கின. இதில் ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

அதேவேளை, பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எலிமினேட்டர் சுற்றில் மோதின. இதில் பெங்களூருவை வீழ்த்தி ராஜஸ்தான் 2வது தகுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.

2வது தகுதிச்சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. இதில் ராஜஸ்தானை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்குள் ஐதராபாத் நுழைந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஞாயிற்றுகிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோத உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்