கடைசி டி20: நியூசிலாந்துக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நெதர்லாந்து

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

Update: 2022-08-05 16:47 GMT

தி ஹாக்,

நியூசிலாந்து அணி நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீட் 53 ரன்களும், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ஸ் தலா 26 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்