ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை... சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை பஞ்சாப் வெற்றிகரமாக சேசிங் செய்தது.;
image courtesy: twitter/@IPL
அகமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்களை குவித்தது. இதனையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் 19.5 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.
அந்த பட்டியல்:-
1. பஞ்சாப் கிங்ஸ் - 6 முறை
2. மும்பை இந்தியன்ஸ் - 5 முறை
3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/ சென்னை சூப்பர் கிங்ஸ் - 3 முறை