டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்தது நியூசிலாந்து அணி

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது.

Update: 2022-07-30 09:59 GMT

எடின்பர்க்,

நியூசிலாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20யில் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்தது.

பின்னர் 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 254 ரன்கள் எடுத்ததன் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் அதிகப்பட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 243 ரன்கள் எடுத்ததே அதிக ரன்னாக இருந்தது. இதன் மூலம் சொந்த சாதனையை நியூசிலாந்து அணி முறியடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்