18 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த பாகிஸ்தான் வீராங்கனை - காரணம் என்ன...?

பாகிஸ்தான் வீராங்கனை ஒருவர் தனது 18 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2023-07-21 10:52 GMT

கோப்புப்படம்

கராச்சி,

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஆயிஷா நசீம். இவருக்கு வயது 18. அவர் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 4 ஒருநாள் போட்டி மற்றும் 30 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.

இந்நிலையில் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி இஸ்லாத்தின் படி தனது வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், அதனால் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்