ஆர்.சி.பி. ரசிகர்கள் குறித்து உருக்கமாக பேசிய தினேஷ் கார்த்திக்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக், ஐ.பி.எல்.-ல் இருந்து ஓய்வு பெற்றார்.

Update: 2024-05-24 18:13 GMT

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ராஜஸ்தானுக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் அடைந்த தோல்வியுடன் ஐ.பி.எல்.-ல் இருந்து ஓய்வு பெற்றார். மைதானத்தில் ரசிகர்களை நோக்கி கையுறையை உயர்த்தி காட்டியபடி வெளியேறிய அவருக்கு விராட் கோலி உள்ளிட்ட சக வீரர்கள் கட்டியணைத்து பிரியாவிடை அளித்தனர்.

இந்த நிலையில், பெங்களூரு அணி ரசிகர்கள் குறித்து தினேஷ் கார்த்திக் உருக்கமாக பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது;

"ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்றாலே அதன் ரசிகர்கள்தான். அவர்களை தாண்டி என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை. விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஒரு முக்கிய பங்கு என்றாலும், அதன் ரசிகர்கள் அதைவிட முக்கிய பங்காக இருக்கிறார்கள். இவர்களால்தான் 2022 உலக கோப்பை அணியில் நான் இடம்பெற்றேன். அதை ஒருபோதும் நான் மறக்கவே மாட்டேன்." என்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்