இந்தியாவுக்கு எதிரான தொடரில் வெற்றி; தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, தற்போது தொடரை சொந்தமாக்கியதன் மூலம் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.;

Update:2023-03-23 06:16 IST

Image Courtesy : @CricketAus twitter

சென்னை,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 21 ரன்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த தொடருக்கு முன்பாக ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் இருந்தது. இப்போது தொடரை சொந்தமாக்கியதன் மூலம் ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த இந்தியா 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இரு அணிகளும் தலா 113 புள்ளிகள் பெற்றிருந்தாலும் தசம புள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்