20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தி ஷகிப் அல்-ஹசன் சாதனை

வங்காளதேசம் 77 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

Update: 2023-03-29 21:40 GMT

image courtesy: Bangladesh Cricket twitter

சட்டோகிராம்,

வங்காளதேசம்- அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது. மழையால் 17 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டான் தாஸ் 18 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அதிவேக அரைசதம் அடித்த வங்காளதேச வீரர் என்ற பெருமையை பெற்ற லிட்டான் தாஸ் 83 ரன்கள் (41 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) திரட்டி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 9 விக்கெட்டுக்கு 125 ரன்னில் அடங்கியது. இதனால் வங்காளதேசம் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. வங்காளதேச கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான ஷகிப் அல்-ஹசன் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையும் சேர்த்து அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 136 ஆக (114 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் டிம் சவுதியை (134 விக்கெட்) பின்னுக்கு தள்ளி ஷகிப் அல்-ஹசன் உலக சாதனை படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்