"சில ஓய்வு முடிவுகள் இருக்கும்"- இந்திய அணியின் எதிர்காலம் குறித்து கவாஸ்கர் கருத்து

இந்திய அணியின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

Update: 2022-11-10 14:45 GMT

Image Courtesy: AFP 

அடிலெய்டு,

8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் இன்று நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், " ஐபிஎல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலே ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். இதனால் அணி நிர்வாகம் வருங்காலத்தில் அவரை அடுத்த கேப்டனாக நியமிக்க முடிவு செய்து வைத்திருப்பார்கள்.

எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியா நிச்சயமாக அணியின் கேப்டனாக உருவெடுப்பார். தற்போது அணியில் சில வீரர்கள் ஓய்வை அறிவிப்பார்கள். இந்திய டி20 அணியில் சுமார் 35 வயதில் உள்ள பல வீரர்கள் அணியில் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்வார்கள்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்