டி20 உலகக்கோப்பை; தொடரில் இருந்து விலகிய வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் - காரணம் என்ன..?

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது.;

Update:2024-05-27 07:01 IST

Image Courtesy: File Image / கோப்புப்படம்

ஜமைக்கா,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அனைத்து அணி நிர்வாகங்களும் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்திருந்த முன்னணி ஆல்ரவுண்டரான ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

அனுபவம் வாய்ந்த வீரரான ஹோல்டர் விலகி உள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக 27 வயது இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஒபேட் மெக்காய் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்