"ஒரு நாள் போட்டி எண்ணிக்கையில் மாற்றம் செய்ய வேண்டியது தேவை ஏதும் வரவில்லை" - ஐ.சி.சி. கருத்து

ஒரு நாள் போட்டி எண்ணிக்கையில் மாற்றம் செய்ய வேண்டியது தேவை ஏதும் வரவில்லை என்று ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-27 21:30 GMT

இஸ்லாமாபாத்,

20 ஓவர் கிரிக்கெட்டின் தாக்கத்தினால் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா உள்ளிட்டோர் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தனர். இதனால் ஒரு நாள் போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏதாவது மாற்றம் செய்யுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் 2023-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரையிலான வருங்கால போட்டி அட்டவணையில் நாடுகள் இப்போது கூட கணிசமான எண்ணிக்கையில் ஒரு போட்டிகளை சேர்த்துள்ளன. அதனால் வருங்கால அட்டவணையில், ஒரு நாள் போட்டி எண்ணிக்கையில் மாற்றம் செய்ய வேண்டியது தேவை ஏதும் வரவில்லை என்று ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்