டுவிட்டரில் 5 கோடி பின் தொடர்பவர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரரானார் விராட் கோலி

இன்ஸ்டாகிராமில் 21.1 கோடி பின்தொடர்பவர்களுடன் உலகின் மூன்றாவது பிரபலமான விளையாட்டு வீரராகவும் கோலி உள்ளார்.

Update: 2022-09-13 09:46 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக பார்ம் இன்றி தவித்து வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

கடந்த காலங்களில் பார்ம் இன்றி தவித்துவந்த விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது டுவீட்டரில் 5 கோடி பின்தொடர்பவர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி, பெற்றுள்ளார். 33 வயதான அவர், இன்ஸ்டாகிராமில் 21.1 கோடி பின்தொடர்பவர்களுடன் உலகின் மூன்றாவது பிரபலமான விளையாட்டு வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக உள்ளார்.

இந்த வரிசையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (47.6 கோடி) மற்றும் லியோனல் மெஸ்ஸி (35.6 கோட் ஆகியோர் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

மேலும், கோஹ்லிக்கு 4.9 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் ரசிகர்கள் உள்ளனர். சமூக ஊடகங்களில் அவரைப் பின்தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கை 31 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கோலி முதல் டி20 சதமடித்து பார்முக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 


Tags:    

மேலும் செய்திகள்