மகளிர் டி20 கிரிக்கெட்; 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தரப்பில் அலிசா ஹீலி 65 ரன், பெத் மூனி 55 ரன் எடுத்தனர்.

Update: 2024-04-01 01:24 GMT

Image Courtesy: @ICC

டாக்கா,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டி தொடர் நேற்று தொடங்கியது. நேற்று முதல் டி20 போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக நிகர் சுல்தானா 62 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 127 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அலிசா ஹீலி 65 ரன், பெத் மூனி 55 ரன் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்