உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது...? - ஆடம் கில்கிறிஸ்ட் பதில்
உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது என்பது குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.;
Image Courtesy: @ICC / @BCCI / twitter
அகமதாபாத்,
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் அக்டோபர் 5ம் தேதி இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் சுமார் 15 நாட்களே உள்ள நிலையில் பல முன்னாள் வீரர்கள் உலகக்கோப்பையை வெல்லும் அணி, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நில்கையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி எது என்பது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய கில்கிறிஸ்ட் கூறியதாவது,
என்னை பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியன் பட்ட வெல்ல வாய்ப்புள்ள அணிகளாகும். இவ்வாறு அவர் கூறினார்.