இளையோர் உலக கோப்பை கால்பந்து டிக்கெட் கட்டணம் ரூ.100–க்கு குறைவு போட்டி இயக்குனர் தகவல்

இளையோர் (17 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் 6–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடக்கிறது

Update: 2017-02-23 23:00 GMT

கொல்கத்தா,

. 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி கொல்கத்தா, கொச்சி, டெல்லி, நவிமும்பை, கவுகாத்தி, கோவா ஆகிய 6 இடங்களில் நடக்கிறது. இந்த போட்டி அமைப்பு குழு இயக்குனர் ஜாவியர் செப்பி கொல்கத்தாவில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இளையோர் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண்பதற்கான டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும். சினிமா படம் மற்றும் மற்ற லீக் ஆட்டங்களை பார்ப்பதற்கான கட்டணத்தை விட குறைவானதாக இருக்கும். உலக கோப்பை போட்டிகளை 100 ரூபாய்க்கு குறைவான கட்டணத்தில் பார்க்க வழிவகை செய்வதே எங்கள் திட்டமாகும். போட்டி நடைபெறும் ஸ்டேடியங்கள் வேகமாக தயாராகி வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன. ஸ்டேடியங்களின் இறுதி கட்ட ஆய்வு மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும். இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி நமது திறமையை எல்லோருக்கும் நிரூபித்து காட்டுவோம்’ என்றார்.

மேலும் செய்திகள்