இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி திருமணம் தோழியை மணக்கிறார்

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. 33 வயதான அவர் தற்போது நடந்து வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடரில் பெங்களூரு எப்.சி. அணிக்காக விளையாடி வருகிறார்.

Update: 2017-11-22 21:00 GMT

புதுடெல்லி,

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. 33 வயதான அவர் தற்போது நடந்து வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடரில் பெங்களூரு எப்.சி. அணிக்காக விளையாடி வருகிறார். சுனில் சேத்ரி விரைவில் இல்லற வாழ்க்கையில் இணைய இருக்கிறார். அவரது திருமணம் கொல்கத்தாவில் டிசம்பர் 4–ந் தேதி நடக்கிறது. தனது நீண்ட நாள் தோழியான சோனம் பட்டாச்சார்யாவை மணக்க இருக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் குர்கானில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் டிசம்பர் 24–ந் தேதி நடைபெறுகிறது. மணப்பெண் சோனம் பட்டாச்சார்யா இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் சுப்ரதா பட்டாச்சார்யாவின் மகள் ஆவார். சோனம் பட்டாச்சார்யா ஸ்காட்லாந்து நாட்டில் பட்டப்படிப்பு படித்தவர் ஆவார்.

மேலும் செய்திகள்