கால்பந்து
உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–அர்ஜென்டினா மோதும் பெக்காம் கணிப்பு

டேவிட் பெக்காமிடம், 2018–ம்ஆண்டு உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் எந்த அணிகள் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கேட்கப்பட்டது.
பீஜிங், விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சீனா சென்றிருந்த இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமிடம், 2018–ம்ஆண்டு உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் எந்த அணிகள் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை சந்திக்கும் என்று நம்புகிறேன்’ என்று பதில் அளித்தார்.மேலும் அவர், ‘இங்கிலாந்து அணி இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். தொடக்க லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணிக்கு நிறைய அனுபவம் கிடையாது. பெரிய அணிகளை சந்திக்க வேண்டி இருப்பதால் இங்கிலாந்துக்கு இந்த உலக கோப்பை பயணம் இனி தான் கடினமாக இருக்கும்’ என்றார்.