கிளப் அணிக்கான உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் காரெத் பாலே ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்

கிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)– காஷிமா ஆன்ட்லெர்ஸ் (ஜப்பான்) அணிகள் மோதின.

Update: 2018-12-20 22:00 GMT

அபுதாபி, 

கிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)– காஷிமா ஆன்ட்லெர்ஸ் (ஜப்பான்) அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரியல் மாட்ரிட் கிளப் 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் காரெத் பாலே ஹாட்ரிக் (44, 53, 55–வது நிமிடம்) கோல் அடித்து அசத்தினார். இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணிக்காக அவர் இதுவரை 10 கோல்கள் போட்டுள்ளார். நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி, அல் அய்னை (ஐக்கிய அரபு அமீரகம்) சந்திக்கிறது.

மேலும் செய்திகள்