பல்கலைக்கழக கால்பந்து: சிதம்பரம் அணிக்கு தங்கப்பதக்கம்

பல்கலைக்கழக கால்பந்து போட்டியில், சிதம்பரம் அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

Update: 2020-03-02 00:10 GMT
புவனேசுவரம்,

முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரம் மற்றும் கட்டாக்கில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று பெண்கள் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக அணி (சிதம்பரம்), காமராஜ் பல்கலைக்கழக அணியை (மதுரை) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.

இந்த போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவு பெற்றது. 17 தங்கம், 19 வெள்ளி, 10 வெண்கலம் என்று மொத்தம் 46 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்த பஞ்சாப் பல்கலைக்கழகம் (சண்டிகார்) ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. புனே சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழக அணி 17 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என்று 37 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது.

மேலும் செய்திகள்