கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் ரூ.7½கோடி நிதியுதவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் ரூ.7½கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

Update: 2020-04-05 00:36 GMT
ரியோடிஜெனீரோ, 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அலற வைத்து இருக்கிறது. தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த பிரேசில் நாடும் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தப்பவில்லை. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் ரூ.7.60 கோடி நிதியுதவி வழங்கி இருக்கிறார்.

ஐ.நா.வின் குழந்தைகள் நலநிதிக்கும், பிரேசிலை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் லூசியானோ ஹக் என்பவர் நடத்தும் அறக்கட்டகளைக்குக்கும், இந்த நிதி பிரித்து வழங்கப்பட்டு இருக்கிறது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் (பிரான்ஸ்) அணிக்காக விளையாடி வரும் 28 வயதான நெய்மார் உலக அளவில் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர்கள் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) உள்பட கால்பந்து பிரபலங்கள் பலரும் கொரோனா நிவாரண நிதி வழங்கி இருந்தது நினைவிருக்கலாம்.

மேலும் செய்திகள்