உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில் அணி அபாரம்

2022-ம் ஆண்டில் கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தென்அமெரிக்க கண்டத்துக்குரிய தகுதி சுற்றில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதி வருகின்றன.

Update: 2020-10-10 21:45 GMT
சாவ்பாலோ, 

2022-ம் ஆண்டில் கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தென்அமெரிக்க கண்டத்துக்குரிய தகுதி சுற்றில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதி வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

இதில் நேற்று முன்தினம் நடந்த தனது தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி உள்ளூர் மைதானத்தில் பொலிவியாவை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தியது.

மேலும் செய்திகள்