அர்ஜெண்டினாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் நெய்மர் விலகல்

தொடை வலி பிரச்சினை காரணமாக அர்ஜெண்டினாவுக்கு எதிரான தகுதிச் சுற்றில் இருந்து நெய்மர் விலகியுள்ளார்.

Update: 2021-11-16 08:26 GMT

பிரேசில்,

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான போட்டியில் விளையாடி வருகிறார். அவர் பயிற்சி மேற்கொண்டபோது தொடை பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்  அர்ஜெண்டினாவுக்கு எதிரான தகுதிச் சுற்றில் விளையாடமாட்டார்.

இந்த தகவலை பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் பிரேசில் அணி ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்