ஐ.எஸ்.எல் கால்பந்து:ஜாம்ஷெட்பூர் -ஹைதராபாத் ஆட்டம் 'டிரா'
ஜாம்ஷெட்பூர் -ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டம் டிரா' வில் முடிந்தது.
கோவா
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் -ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என 'டிரா' வில் முடிந்தது.
41 -வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கிரெக் ஸ்டெவார்ட் ஒரு கோல் அடித்தார் .இதனால் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.
இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணியின் ஒக்பேச்சே 56- வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் ,இதனால் ஜாம்ஷெட்பூர் -ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என 'டிரா' வில் முடிந்தது .