ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தின் நேற்றைய போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி பெற்றது.

Update: 2021-12-05 23:21 GMT
கோவா,

11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் ஒடிசா அணியும் மோதியது.

 விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கேரளா அணி  2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய கேரளாவுக்கு இது முதலாவது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியும், ஏ.டி.கே. மோகன் பகான் அணியும் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.

மேலும் செய்திகள்