பிரேசில் கால்பந்து கதாநாயகன் ரொனால்டோ கொரோனாவால் பாதிப்பு

உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-01-03 23:45 GMT
கோப்புப்படம்
ரியோடிஜெனீரோ,

1994 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவரும், உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 3 முறை வென்றவருமான 45 வயது முன்னாள் முன்கள வீரரான ரொனால்டோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். 

இதனை அடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறார். இதனை ரொனால்டோ முதல்முறையாக தொழில்முறை வீரராக களம் கண்ட பிரேசிலை சேர்ந்த குருஜிரோ கிளப் நிர்வாகம் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்