ஐ.எஸ்.எல் கால்பந்து : ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி..!
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்-கோவா அணிகள் மோதின;
கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்-கோவா அணிகள் மோதின
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை,முதல் பாதியில் 0-0 என இருந்தது .
தொடர்ந்து இரண்டாவது பாதியில் ஜாம்ஷெட்பூர் அணியின் சிமா 49 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் இதற்கு பதிலடி கொடுக்க எதிரணியால் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என வெற்றி பெற்றது