உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மீண்டும் நாளை மோதல்

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மீண்டும் நாளை மோத உள்ளன.

Update: 2024-03-25 14:48 GMT

image courtesy: twitter/ @IndianFootball

அபா,

ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.

இதில் இந்திய அணி, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. அந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து இந்தியா, தனது அடுத்த ஆட்டத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தானுடன் நாளை மோத உள்ளது. இந்த ஆட்டம் அசாம் மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இரவு 7 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் இரு அணிகளும் உள்ளன. இதனால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பெறும் அணி மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். இதுவரை 3 போட்டிகளில் (முதல் கட்ட தகுதிச்சுற்றில் 2 போட்டிகள்) விளையாடியுள்ள இந்திய அணி தலா ஒரு வெற்றி, தோல்வி மற்றும் சமன் என 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 2 தோல்வி மற்றும் 1 டிராவுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்