முகக்கவசம் அணிய மறுத்த வீரர்கள்... விமான நிலையத்திலேயே விட்டுச்சென்ற அதிகாரிகள்...!

முகக்கவசம் அணிய மறுத்ததால் வீரர்களை, அதிகாரிகள் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர்.;

Update:2022-01-02 15:50 IST
கனடா,

விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்ததால் ரஷ்ய ஜூனியர் ஹாக்கி அணியை விமானத்தில் ஏற்ற விமான நிலைய அதிகாரிகள் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புத்தாண்டிற்கு முந்தய தினம் இரவு ரஷ்ய நாட்டின் ஜூனியர் ஹாக்கி அணியினர் கனடாவின் கல்கரியில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு புறப்பட்டனர். அப்போது அவர்கள் விமானத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்து உள்ளனர். 

இதனால் அவர்களை முகக்கவசம் அணிய விமான நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. மீண்டும் அவர்கள் முகக்கவசம் அணிய மறுத்ததால் அவர்களை அதிகாரிகள் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி விமானத்தில் அவர்கள் புகைபிடித்ததாக சக பயணி ஒருவர் குற்றம் சாட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டிய விளையாட்டு வீரர்களே முகக்கவசம் அணிய மறுத்த விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்