5 பேர் ஆக்கி போட்டி : இந்திய அணி சாம்பியன்
இன்று நடந்த இறுதி போட்டியில் இந்திய அணியும் , போலந்து அணியும் மோதின .;
Image Courtesy : Hockey India Twitter
லாசானே,
சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் முதலாவது 5 பேர் ஆக்கி போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள லாசானே நகரில் நேற்று தொடங்கி நடைபெற்றது .
இதில் ஆண்கள் பிரிவில் இன்று நடந்த இறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும் ,2வது இடம் பிடித்த போலந்து அணியும் மோதின .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-4 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது .