மகளிர் ஆக்கி லீக் இன்று தொடக்கம்

ராஞ்சி ராயல்ஸ்- எஸ்.ஜி. பைப்பர்ஸ் அணிகள் மோத உள்ளன.;

Update:2025-12-28 14:16 IST

ராஞ்சி,

2-வது மகளிர் ஆக்கி இந்தியா லீக் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. ஜனவரி 10-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் ராஞ்சி ராயல்ஸ், சூர்மா ஆக்கி கிளப், உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.

இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ்- எஸ்.ஜி. பைப்பர்ஸ் அணிகள் மோத உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்