ஆக்கி இந்தியா லீக்: புதிய அட்டவணை வெளியீடு

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - ஐதராபாத் டூபான்ஸ் அணிகள் மோதுகின்றன.;

Update:2025-12-23 11:06 IST

புதுடெல்லி,

ஆக்கி இந்தியா லீக் போட்டி ஜனவரி 3-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை சென்னை, ராஞ்சி, புவனேஸ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்ட ஆட்டங்கள் வருகிற ஜனவரி 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதனையடுத்து 2-ம் கட்ட லீக் ஆட்டங்கள் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ராஞ்சியில் நடைபெற உள்ளன. இறுதி கட்ட லீக் ஆட்டங்கள், பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி அனைத்தும் புவனேஸ்வரில் நடைபெற உள்ளன.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - ஐதராபாத் டூபான்ஸ் அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்