ஆசிய விளையாட்டு ஆக்கி போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

இதேபோல் பெண்கள் பிரிவில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.;

Update:2023-08-09 03:04 IST

கோப்புப்படம் 

புதுடெல்லி,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இடம்பெறும் 40 விளையாட்டுகளில் ஒன்றான ஆக்கி போட்டி அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்காளதேசம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் தென்கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேசியா அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் செப்டம்பர் 24-ந் தேதி உஸ்பெகிஸ்தானையும், மற்ற லீக் ஆட்டங்களில் 26-ந் தேதி சிங்கப்பூரையும், 28-ந் தேதி ஜப்பானையும், 30-ந் தேதி பாகிஸ்தானையும், அக்டோபர் 2-ந் தேதி வங்காளதேசத்தையும் எதிர்கொள்கிறது.

இதேபோல் பெண்கள் பிரிவில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, தென்கொரியா, மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர் அணிகளும், 'பி' பிரிவில் ஜப்பான், சீனா, தாய்லாந்து, கஜகஸ்தான், இந்தோனேசியா அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் செப்டம்பர் 27-ந்தேதி சிங்கப்பூரையும், 29-ந்தேதி மலேசியாவையும், அக்டோபர் 1-ந்தேதி தென்கொரியாவையும், 3-ந்தேதி ஹாங்காங்கையும் சந்திக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்