நான்கு நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆக்கி தொடர்; இந்தியா - இங்கிலாந்து மகளிர் போட்டி டிரா
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஜூனியர் மகளிருக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.;
image courtesy; twitter/@TheHockeyIndia
பெர்லின்,
ஜெர்மனியில் 4 நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தொடரை நடத்தும் அணியான ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் தனது முதலாவது போட்டியில் இந்திய மகளிர் அணி ஜெர்மனி அணி உடன் தோல்வியை சந்தித்து இருந்தது.
இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி உடன் விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்திய மகளிர் அணி அடுத்த போட்டியில் ஸ்பெயின் அணி உடன் பலபரீட்சை நடத்த உள்ளது.