துளிகள்

* 8 அணிகள் இடையிலான 7–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இங்கிலாந்தில் ஜூன் 24–ந் தேதி முதல் ஜூலை 23–ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிட்டது. இதன்படி ஜூன் 24–ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து–இந்தியா

Update: 2017-03-08 22:15 GMT

*காலேயில் நடந்து வரும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2–வது நாளான நேற்று இலங்கை அணி முதல் இன்னிங்சில் 494 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. குசல் மென்டிஸ் 194 ரன்கள் விளாசினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

* 8 அணிகள் இடையிலான 7–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இங்கிலாந்தில் ஜூன் 24–ந் தேதி முதல் ஜூலை 23–ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிட்டது. இதன்படி ஜூன் 24–ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து–இந்தியா அணிகள் மோதுகின்றன.

* போபாலில் நேற்று நடந்த பெலாரசுக்கு எதிரான 5–வது மற்றும் கடைசி ஆக்கி ஆட்டத்தில் இந்திய பெண்கள் ஆக்கி அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரை 5–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

*தோள்பட்டை காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய இரு டெஸ்டுகளில் ஆஸ்திரேலிய ஆல்–ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆடமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்