உலக கோப்பை வில்வித்தை: இந்தியா தங்கம் வென்று சாதனை

உலக கோப்பை வில்வித்தை: இந்தியா தங்கம் உலக கோப்பை வில்வித்தை (நிலை 1) போட்டி ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது. வென்று சாதனை

Update: 2017-05-20 21:30 GMT
ஷாங்காய்,

உலக கோப்பை வில்வித்தை (நிலை 1) போட்டி ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது. இதில் அணிகளுக்கான காம்பவுண்ட் பிரிவில் வியட்னாம், உலக சாம்பியன் ஈரான், ‘நம்பர் ஒன்’ அணியான அமெரிக்கா ஆகிய அணிகளை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அபிஷேக் வர்மா, ராஜூ சின்னா ஸ்ரீதர், அறிமுக வீரர் அமன்ஜீத்சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் கொலம்பியாவை எதிர்கொண்டது. இதில் சாதுர்யமாக செயல்பட்ட இந்திய அணியினர் 226-221 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினர். இதில் 33 வயதான ராஜூ சின்னா ஸ்ரீதர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்திய நட்சத்திரங்கள் தீபிகா குமாரி, அதானு தாஸ் கால்இறுதியை கூட தாண்ட முடியாமல் ஏமாற்றம் அளித்தனர். 

மேலும் செய்திகள்