சீனாவில் மூத்தோர் தடகளத்தில் பங்கேற்க இருந்த 101 வயது வீராங்கனைக்கு விசா மறுப்பு
சீனாவின் ருகாவ் நகரில் 20–வது ஆசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.;
சண்டிகார்,
சீனாவின் ருகாவ் நகரில் 20–வது ஆசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய மூத்த ஓட்டப்பந்தய வீராங்கனை 101 வயதான மன் கவுர் தனது 79 வயது மகன் குர்தேவ் சிங்குடன் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் டெல்லியில் உள்ள சீன தூதரகத்தில் ‘விசா’வுக்கு அணுகிய போது, போட்டி அமைப்பாளர்கள் தனிப்பட்ட முறையில் அழைத்ததற்கான கடிதத்தை இணைக்காததால் ‘விசா‘ தர இயலாது என்று கூறி மறுத்துவிட்டனர்.