தேசிய பள்ளி விளையாட்டு தமிழக தடகள அணிக்கு 2-வது இடம்

தமிழக தடகள அணிக்கு 2-வது இடம்: முதலாவது தேசிய பள்ளி விளையாட்டு போட்டி டெல்லியில் 4 நாட்கள் நடந்தது.

Update: 2018-02-06 22:45 GMT
சென்னை,

முதலாவது தேசிய பள்ளி விளையாட்டு போட்டி டெல்லியில் 4 நாட்கள் நடந்தது. இதில் தடகள போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனைகள் கொலிஷியா (டிரிபிள்ஜம்ப்), சத்யா (போல்வால்ட்), சுமத்திரா (400 மீட்டர் ஓட்டப்பந்தயம்) ஆகியோர் தங்கப்பதக்கமும், ஜென்சி சூசன் (குண்டு எறிதல், வட்டு எறிதல்) 2 வெள்ளிப்பதக்கமும், தபிதா (100 மீட்டர் தடை ஓட்டம்), கிரிதரணி (100 மீட்டர் ஓட்டம்) ஆகியோர் தலா ஒரு வெள்ளிப்பதக்கமும், சான்ட்ரா தெரசா மார்ட்டின் (100, 200 மீட்டர் ஓட்டம்) 2 வெண்கலப்பதக்கமும், தபிதா (டிரிபிள்ஜம்ப்), பபிதா (நீளம் தாண்டுதல்) தலா ஒரு வெண்கலப்பதக்கமும் பெற்றனர். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழக பெண்கள் அணி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

ஆண்கள் பிரிவில் தமிழக வீரர்கள் பிரவீன் (டிரிபிள்ஜம்ப்) தங்கப்பதக்கமும், மாதேஷ் (1,500 மீட்டர் ஓட்டம்), ஸ்ரீகிரண் (800 மீட்டர் ஓட்டம்), பிரவீன் (நீளம் தாண்டுதல்) வெள்ளிப்பதக்கமும், நிஷாந்த் ராஜா (100 மீட்டர் தடை ஓட்டம்) வெண்கலப்பதக்கமும் வென்றனர். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழக ஆண்கள் அணி வெள்ளிப்பதக்கமும், 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழக ஆண்கள் அணி வெண்கலப்பதக்கமும் கைப்பற்றியது. 109.5 புள்ளிகள் குவித்த தமிழக அணி ஒட்டுமொத்தத்தில் 2-வது இடம் பிடித்தது.

மேலும் செய்திகள்