10 ஆண்டு காலம் இந்தியன் வாலிபால் லீக் போட்டியை நடத்த ஒப்பந்தம்

இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் முக்கிய கமிட்டி கூட்டம் கோழிக்கோட்டில் நடந்தது.

Update: 2018-02-22 22:15 GMT
கோழிக்கோடு,

66-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்து வருகிறது. இதையொட்டி இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் முக்கிய கமிட்டி கூட்டம் அதன் பொதுச்செயலாளர் ராம்அவதார்சிங் ஜாக்கர் தலைமையில் கோழிக்கோட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த 10 ஆண்டு காலம் தொழில்முறை இந்தியன் வாலிபால் லீக் போட்டியை நடத்துவது தொடர்பான ஒப்பந்தம் விளையாட்டு மார்க்கெட்டின் நிறுவனமான பேஸ்லைன் வெஞ்சூர்ஸ்சுடன் கையெழுத்தானது. இதற்கான ஒப்பந்த பத்திரத்தை பேஸ்லைன் வெஞ்சூர்ஸ் நிறுவன இயக்குனர் டுஷின் மிஸ்ரா, இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ராம் அவதார்சிங் ஜாக்கர் ஆகியோர் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய கைப்பந்து சம்மேளன பொருளாளர் சேகர் போஸ், தேசிய பயிற்சியாளர் ஸ்ரீதரன், முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர்கள் அப்துல் ரசாக், ஜெ.நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டுக்கான இந்தியன் வாலிபால் லீக் போட்டியை அக்டோபர் மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்கள், இதில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் குறித்த முழு விவரங்கள் ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்