புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் மும்பையில் நடக்கிறது

புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் மும்பையில் வரும் 30-ந் தேதி நடக்க உள்ளது.

Update: 2018-05-14 22:15 GMT
மும்பை,

6-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உள்பட 12 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் நடக்கிறது. வீரர்கள் ஏலப்பட்டியலில் மொத்தம் 422 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இதில் ஈரான், வங்காளதேசம், ஜப்பான், கென்யா, மலேசியா, இலங்கை உள்பட 14 வெளிநாடுகளை சேர்ந்த 58 வீரர்களும் அடங்குவார்கள். 87 பேர் வருங்கால கபடி கதாநாயகர்கள் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்கள். கடந்த சீசனில் ஆடிய 21 வீரர்களை அந்தந்த அணிகள் தக்க வைத்து கொண்டு இருக்கின்றன. தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாகூர், அமித் ஹூடா, சி.அருண் ஆகிய 3 வீரர்களை தன்வசம் தக்கவைத்து இருக்கிறது.

மேலும் செய்திகள்