ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உத்தரபிரதேச வீராங்கனைக்கு ரூ.4½ லட்சம் நிதி உதவி

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் வருகிற 22–ந் தேதி தொடங்குகிறது.;

Update:2018-06-10 02:45 IST

லக்னோ, 

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் வருகிற 22–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 19 வயதான பிரியா சிங் தேர்வு பெற்றுள்ளார். ஏழை தொழிலாளியின் மகளான அவருக்கு ஜெர்மனி செல்வதற்கு போதிய பணம் இல்லை. இதனால் போட்டியில் பங்கேற்க தனக்கு உதவி செய்யும்படி உள்ளூர் எம்.எம்.ஏ. முதல், முதல்–மந்திரி மற்றும் பிரதமர் வரை பிரியாசிங் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த கோரிக்கைக்கு உடனடியாக பதில் கிடைக்காததால், ‘தனக்கு சொந்தமான மாடுகளை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் தனது மகளை நிச்சயம் ஜெர்மனி போட்டிக்கு அனுப்பி வைப்பேன்’ என்று பிரியாசிங்கின் தந்தை பிரிஜ்பால் சிங் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையின் ஏழ்மை நிலையை அறிந்த உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத், ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பிரியாசிங்குக்கு ரூ.4½ லட்சம் நிதி உதவியை மாநில அரசு சார்பில் உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்