ஆசிய விளையாட்டுப்போட்டி: துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 4 பேர் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

Update: 2018-08-24 05:03 GMT
ஜகார்த்தா

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் இன்று துடுப்பு படகு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆண்களுக்கான இலகுரக துடுப்பு படகு ஒற்றையர் பிரிவில் துஷ்யந்த், இரட்டையர் பிரிவில் ரோகித் குமார், பகவான் தாஸ் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

இந்நிலையில் 4 வீரர்கள் பங்கேற்கும் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இந்திய அணியில் ஸ்வரண் சிங், தத்து பாபன் போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் இணைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6 நிமிடம் 17.13 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தனர். இந்தோனேசிய அணி வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்து அணி வெண்கலப் பதக்கமும் வென்றது. 

இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி 5 தங்கம், 4 வெள்ளி,  12 வெண்கலம் என மொத்தம்  21 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்