பிற விளையாட்டு
பிறந்த குழந்தைக்கு ஏசியன் கேம்ஸ் என பெயர் சூட்டிய தம்பதியினர்

இந்தோனேசியாவைச் சேர்ந்த தம்பதியினர் புதிதாக பிறந்த குழந்தைக்கு அபிடா ஏசியன் கேம்ஸ் (Abidah Asian Games) என்று பெயர் சூட்டியுள்ளார்.
ஜகார்தா

இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி இன்றோடு 6 -வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்த நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். 

இந்நிலையில் பலிம்பாங்க் நகரில் உள்ள யோர்டானியா டென்னி - வெரா என்ற தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ஏசியன் கேம்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், 

“பலிம்பாங்க் நகரில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடப்பது மிகவும் அரிது.. இந்த வருடம் எங்கள் பகுதியில் விளையாட்டு நடப்பது பெருமையாக உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் எங்கள் மகளுக்கு சூட்டியுள்ளேன். விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் தான்” என கூறியுள்ளார்.