உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு ஏமாற்றம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

Update: 2019-02-25 22:30 GMT
புதுடெல்லி,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 61 நாடுகளை சேர்ந்த 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஏற்கனவே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை அபுர்வி சண்டிலாவும், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரியும் புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றனர். நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் செர்ஜி காமன்ஸ்கி 249.4 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றார். சீன வீரர்கள் லூ யுகுன் 247 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஹூய் ஜிசெங் 225.9 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்த பந்தயத்தில் பங்கேற்ற இந்திய வீரர்கள் திவ்னாஷ்சிங் பன்வார் (627.2 புள்ளிகள்) 12-வது இடமும், ரவிகுமார் (627 புள்ளிகள்) 14-வது இடமும், தீபக்குமார் (624.3 புள்ளிகள்) 34-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்து தகுதி சுற்றுடன் வெளியேறினார்கள். இதனால் நேற்று பதக்க வேட்டையில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேலும் செய்திகள்