ஐதராபாத் கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது

ஐதராபாத் கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்க உள்ளது.

Update: 2019-07-18 23:23 GMT

* உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப்போட்டி டையில் முடிந்தது. அடுத்து நடந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் அதிக பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. சூப்பர் ஓவரில் 2-வது பந்தில் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் சிக்சர் அடித்தும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை. இதனால் ஜேம்ஸ் நீஷம் சோகத்தில் ஆழ்ந்தார். அதேநேரத்தில் அவருக்கு மற்றொரு வருத்தம் தரக்கூடிய சம்பவமும் நடந்துள்ளது. ஜேம்ஸ் நீஷம் சூப்பர் ஓவரில் சிக்சர் அடித்த நேரத்தில் அவருக்கு பள்ளி பருவத்தில் பயிற்சியாளராக இருந்த டேவிட் ஜேம்ஸ் கோர்டாயின் உயிர் ஆஸ்பத்திரியில் பிரிந்ததாக அவரது மகள் தெரிவித்துள்ளார். தனது பால்ய கால பயிற்சியாளர் மறைவுக்கு ஜேம்ஸ் நீஷம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

* ஐதராபாத் கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அறிவித்துள்ளார்.

* ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் சரபோத் சிங் 239.6 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 9 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்