உலக நீச்சல் போட்டியில் ‘இரும்பு மங்கை’ சாதனை

உலக நீச்சல் போட்டியில் இரும்பு மங்கையான கதின்கா ஹோஸ்ஜூ சாதனை படைத்தார்.

Update: 2019-07-28 23:54 GMT
குவாங்ஜூ,

18-வது உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குவாங்ஜூ நகரில் கடந்த 12-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் ஹங்கேரி வீராங்கனை கதின்கா ஹோஸ்ஜூ 4 நிமிடம் 30.39 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். ‘இரும்பு பெண்மணி’ என்று செல்லமாக அழைக்கப்படும் 30 வயதான கதின்கா ஹோஸ்ஜூ உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இதே பிரிவில் தொடர்ச்சியாக ருசித்த 5-வது தங்கம் இதுவாகும். ஏற்கனவே 2009, 2013, 2015, 2017-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருந்தார். இதன் மூலம் உலக நீச்சலில் குறிப்பிட்ட பிரிவில் 5 தங்கப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற அரிய சாதனையை அவர் படைத்தார்.

மேலும் செய்திகள்