புரோ கபடி: பெங்களூரு அணி 4-வது வெற்றி

31-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி 47-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து 4-வது வெற்றியை பதிவு செய்தது.

Update: 2019-08-08 21:45 GMT
பாட்னா,

7-வது புரோ கபடி லீக் தொடரில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி 47-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து 4-வது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக பெங்களூரு வீரர் பவான் செராவத் 17 புள்ளிகள் சேகரித்தார். இந்த சீசனில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியான தெலுங்கு டைட்டன்ஸ் சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இதே மைதானத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- மும்பை (இரவு 7.30 மணி), பாட்னா பைரட்ஸ் - உ.பி.யோத்தா (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்