தமிழ்நாடு கைப்பந்து சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு கைப்பந்து சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2019-08-25 23:33 GMT
சென்னை,

தமிழ்நாடு கைப்பந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் (2019-2023) சென்னையில் நேற்று நடந்தது. நீதிபதி ஹரிபரந்தாமன் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெற்றது. எஸ்.வாசுதேவன் தலைமையில் ஒரு அணியும், பொன் கவுதம் சிகாமணி எம்.பி. தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. காலையில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு, மாலையில் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பொன் கவுதம் சிகாமணி 250 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.வாசுதேவன் 228 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். சேர்மன் பதவிக்கு ஏ.கே.சித்திரைபாண்டியன் 251 ஓட்டுகள் பெற்று தேர்வானார். அவரை எதிர்த்து நின்ற வெங்கடபதி 227 ஓட்டுகளுடன் தோல்வி அடைந்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் 252 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எம்.பிரபாகரன் 224 ஓட்டுகளுடன் தோல்வியை தழுவினார். பொருளாளர் பதவியை எம்.பி.செல்வகணேஷ் 255 ஓட்டுகளுடன் கைப்பற்றினார். இந்த பதவிக்கு போட்டியிட்ட ரவீந்திரன் 221 ஓட்டுகளுடன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

துணைசேர்மன்களாக குணசீலன் (238 ஓட்டு), ஜெகநாதன் (246), நாராயணசாமி (242), ராமானுஜம் (240), ரங்கசாமி (238) ஆகியோரும், இணைச் செயலாளர்களாக கலைச்செல்வன் (252), மகேந்திரன் (238), ரத்தினபாண்டியன் (237), சதாசிவம் (234) ஆகியோரும் தேர்வானார்கள்.

மேலும் செய்திகள்